HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

02.09.2010


தமிழ் கட்சிகளின் அரங்கம் இந்திய வெளிவிவகார செயலாளர் திருமதி நிருபமா ராவ் அவர்களுடன் சந்திப்பு
 

தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று காலை (02.09.2010) இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திருமதி நிருபமாராவ் அவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியது இந்திய உயர்ஸ்தானிகர் திரு அசோக் கே காந்தா, துணைஸ்தானிகர் விக்ரம் மிஸ்றி அரசியல் செயலர் திரு அனுரக் ஸ்ரீவத்சவா ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்தனர்

இச் சந்திப்பில் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இணைப்புச் செயலாளர் திரு ராஜ்குமார் பத்மநபா ஈபிஆர்எல்எப் இன் பொதுச் செயலாளர் தி. ஸ்ரீதரன் புளொட் அமைப்பின் செயலாளர் சதானந்தன் அகதிகள் புனர்வாழ்வு புனர்வாழ்வமைப்பின் தலைவர் சந்திரஹாசன், திரு. பேரின்பநாயகம் தமிழ் தேசியவிடுதலை முன்னணியின் தலைவர் சிவாஜிலிங்கம் ஸ்ரீரெலோ அமைப்பின் தலைவர் உதயராசா திரு. சுரேந்திரன் ஈழவர் விடுதலை முன்னணியின் தலைவர் பிரபாகரன் ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் குமரகுருபரன் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்

தமிழ் கட்சிகளின் அரங்கம் மட்டக்களப்பில் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இறுதி சந்திப்பின் போது கருத்திற்கெடுத்துக்கொள்ளப்பட்ட 12 விடயங்களையும் இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டது.

1. அர்த்தமுள்ள மீள் குடியேற்றம்
2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள்கட்டுமானம்
3. உயர் பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக அகற்றுதல்
4. மக்களின் வாழ்விடங்களில் இராணுவ குடியேற்றங்களைத் தடுத்தல்
5. முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல்
6. யுத்தத்தில் உடைமைகளை உறவுகளை இழந்த அங்கவீனர்களான மக்களுக்கு நட்ட ஈட்டைப்பெற்றுக் கொடுத்தல்
7. வடக்கு கிழக்கு உட்பட தமிழ் பேசும்மக்களின் இனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தளாத்துதல்

8. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைத் தளாத்துதல்
9. மீள் குடியேற்றத்தை வெளிப்படையாகச் செய்வதுடன் அதற்கு மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச உள்ள+ர் தெண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளல்
10. தடுத்துவைக்கபட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் இறுதி யுத்த நடவடிக்கையின் போது சரணடைந்த கைதுசெய்யப்பட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன் அவர்களின விடுதலைக்கு ஆக்கப+ர்வமான நடவடிக்கையை எடுத்தல்
11. இனப்பிரச்சனைத் தீர்விற்கு மாகாண சபைக்கெனப் பரிந்துரைசெய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பில் உள்ள 13வது அரசியல் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துதல்
12. அடுத்து வரும் கட்டங்களில் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் முஸ்லீம் மலையக கட்சிகளை இணைத்துச் செயற்படுவது

ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் கருத்துதெரிவித்த இந்திய வெளிவிவகாரச் செயலர் யதார்த்தபூர்வமாகச் செயற்படுதல் மற்றும் தமிழ்கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டை வலியுறுத்தியதுடன் வடக்கு கிழக்கின் சமூகபொருளாதார கலாச்சார அபிவிருத்திப் பணிகள் உட்பட இலங்கை வாழ்மக்களின் நலன்களில் இந்தியா கரிசனையுடன் அக்கறையுடன் செயற்படும் எனவும் தெரிவித்தார்.
 

 


செய்தித் தலைப்புகள்                         

 

02.09.2010

02.09.2010

02.09.2010

02.09.2010

 

தற்கொலை செய்ய முயற்சித்த கைதி படுகாயங்களுடன் வைத்தியசாலையில்.
மக்களைச் சந்தித்தன் பின்னர் நிருபமாராவ் ஜனாதிபதியுடன் பேச்சு.
அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக ஜேவிபி துண்டுப் பிரசுரம்.
தமிழினியை தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

   

 

02.09.2010


தற்கொலை செய்ய முயற்சித்த கைதி வைத்தியசாலையில்.


மரண தண்டணைக் கைதி ஒருவர் நீதிமன்ற மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சமபவம் ஒன்று நேற்று (01.09.2010) யாழ் உயர்நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
மூன்று வயது மகனை அடித்துக் கொலை செய்தமை, மனைவியின் கையினை வெட்டித் துண்டித்தமை போன்ற சம்பவங்களுக்காக மேல் நீதிமன்றத்தினால மரண தண்டணை வழங்கப்பட்ட பருத்தித்துறையைச் சேர்ந்த ராசகுமார் ராஜகுமார் என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

02.09.2010


நிருபமாராவ் ஜனாதிபதியுடன் பேச்சு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் நேற்றயதினம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவைச் சந்தித்து போருக்கு பின்னர் நிலவும் தற்போதய நிலைமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வெளியுறவுச் செயலருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக்காந்தா கலந்துகொண்டிருந்ததாகவும் இலங்கையின் சார்பில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், நிதிஅமைச்சின் செயலாளர் கலாநிதி பி.வி.ஜெயசுந்தர ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இதேவேளை ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னர் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களையும், இடம்பெயர்ந்து மீள தமது சொந்த இடங்களில் குடியமர்ந்துள்ள மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

02.09.2010


அரசியல்யாப்பு திருத்தத்திற்கு எதிராக ஜேவிபி துண்டுப் பிரசுரம்

தற்போதய அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக மக்களை விழிப்பூட்டும் விதத்திலான துண்டுப் பிரசுரங்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கும் நடவடிக்கையினை மக்கள் விடுதலை முன்னணி இன்று (02.09.2010) காலை ஆரம்பித்துள்ளது.
கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படும் துண்டுப்பிரசுர வினியோகத்தில் 20 இலட்சம் துண்டுப் பிரசுரங்கள் மக்கள் மத்தியில் வினியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02.09.2010

தமிழினியை தொடர்ந்து  தடுத்து வைக்
நீதிமன்றம் உத்தரவு.

வன்னியின் இறுதிக்கட்ட போரில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட புலிகளின் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள தமிழினி நேற்று முன்தினம்
31.08.2010 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தமிழினியிடம் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் புலிகள் அமைப்பு மேற்கொண்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை அவர் வெளியிட்டிருப்பதாக சிஐடியினர் தெரிவித்தததை அடுத்து தொடர்ந்தும் அவரை விசாரணை செய்வதற்காக தடுத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

31.08.2010


ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்.


இலங்கையில் ஜனாதிபதியொருவர் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக இருப்பதற்கான அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவிற்கும் இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் புதிய அரசியல்; அமைப்புத்திருத்தச் சட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்றயதினம் (30.08.2010) நடைபெற்றபோது அரசியல் யாப்பு திருத்தச்சட்டத்திற்கு
மூன்றில் இரண்டு பெரும்பான்மை தற்போது கிடைத்துள்ளது. எனவே ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்திற்கான கட்டுப்பாடு நீங்கியுள்ளது. மேலும் உள்ளுராட்சி சபைக்கான சீர்திருத்தம், 17வது அரசியல் அமைப்புச் சீர்திருத்தம், என்பனவும் இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

31.08.2010


500 முன்னாள் போராளிகள் உறவினர்களிடம் கையளிக்கப்படுவர்.

புனர்வாழ்வு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 500 புலி உறுப்பினர்களை அவர்களது உறவினர்களிடம் கையளிக்கும் நிகழ்வு புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர தலைமையில் எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சாவும் கலந்துகொள்ளவுள்ளார் என புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளர்.

31.08.2010

முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் ஜயந்தகொடி மரணமானார்.


பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் ஜயந்தகொடி நேற்று (30.08.2010) மாலை மரணமடைந்துள்ளார். புற்நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தனகல பிரதேசத்தைச் சேர்ந்த இவர் கலாசார மற்றும் சமய விவகார அமைச்சராகவும், பிரதி வெளிவிவகார அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

31.08.2010


இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ்வின் இலங்கை விஜயத்தினை தொடர்ந்து இந்தியாவின் இராணுவத்தளபதி விஜய்குமார் சிங், விமானப்படைத்தளபதி எயார் சீவ் மார்ஷல் பிரதீப் வசந்த நாயக், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர்; இலங்கை வரவுள்ளனர்.
இவர்கள் இலக்கையின் பல்வேறு அரச உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவதுடன் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

31.08.2010

243 குடும்பங்கள் 20 வருடகாலமாக நலன்புரி முகாங்களில்

வலிமேற்கில் கடந்த 20 வருடங்களாக 243 குடும்பங்களைச் சேர்ந்த 3400 பேர் 7 நலன்புரி முகாங்களில் தங்கியுள்ளதாக வலி மேற்குப் பிரதேச செயலர் திருமதி கே.பாபு தெரிவித்துள்ளார்.
வலி.மேற்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றபோது பிரதேசத்தின் தற்போதய நிலைமை தொடர்பாக விபரிக்கும்போது அவர் இத்தகவலினை வெளியிட்டுள்ளார். இப்பிரதேசம் 15 ஆயிரத்து 567 நிரந்தர குடும்பங்களைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் இங்கு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள ஆயிரத்து 327 குடும்பங்களுக்கு இடம்பெயர்ந்தோர்; நிவாரணம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

30.08.2010


அமைச்சர் எஸ்.பி.  யாழ் பலக்கலைக்கழகத்திற்கு விஜயம்.

யாழ் குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க நேற்றயதினம் (29.08.2010) யாழ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
இதன்போது பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் விடுதி வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கப்படவேண்டும், விவசாய நிலையத்தை மீளவும் கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை மாணவர்கள் அமைச்சரிடம் முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு உரையாற்றிய அமைச்சர் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியல் மற்றும் விவசாய பீடங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது இதற்கு அமைய விவசாய பீடத்தினை கிளிநொச்சியில் மீளவும் இயங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

30.08.2010

இலங்கைக்கு வரும் நிருபமாராவ் வடபகுதிக்கு விஜயம


இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்றயதினம் (30.08.2010) கொழும்பு வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் நாளையதினம் வட பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்டதன் பின்னா ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
வடபகுதிக்கு விஜயம் மேற்கொள்ளும் நிருபமாராவ் யுத்தத்தால் இடம்பெயர்ந்து இன்னமும் நலன்புரி முகாங்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். மேலும் மீளக்குடியமர்ந்துள்ள மக்களை பார்வையிடும் அவர் அவர்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னர் ஜனாதிபதியிடம் அது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30.08.2010

கிளிநொச்சியில் 48 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கைக்கு மானியம்.


கிளிநொச்சி மாவட்டத்தில் 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு மானிய அடிப்படையில் அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தலைமையில் நேற்றயதினம் (29.08.2010) கிளிநொச்சியில் நடைபெற்ற மீள்குடியேற்றம், விவசாய உட்கட்டுமானப்பணிகள் தொடர்பான கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இக்கூட்டத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க,; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி.ஏ.சந்திரசிறி, ஜனாதிபதி துரித செயலணிக் குழுவின் செயலாளர், உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

29.08.2010

வடமராட்சி கிழக்கு மக்கள் மீளக் குடியமர இராணுவம் அனுமதி.

யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையிலான குழுவினர் யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நேற்று (28.08.2010) மாலை இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வடமராட்சி கிழக்கு மக்கள் மீளவும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமருவதற்கான அனுமதியினை தாம் வழங்குவதாக யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துரசிங்க தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த 81 குடும்பங்கள் நாளையதினம் மீளக்குடியமர்த்தப்படுவர் என்றும் அவர்களுக்கான கட்டுமானப் பணியினை யாழ் செயலகம் மேற்கொளவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாருடன், மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர், மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட கிராமசேவையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

29.08.2010

இலங்கையில் வீட்டு நிர்மாணப் பணிகளை

இந்திய மும்பை கட்டடத்திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள 51 ஆயிரம் வீடுகளையும் கட்டுவதற்கு மும்பாய் கட்டடத்திணைக்களம் முன்வந்துள்ளது. வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின் பயனாளிகள் தெரிவுப் பணிகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கமே மேற்கொள்ளும் எனவும் அதன் நிர்மாணப் பணிகள் அனைத்தையும் இந்திய அரசாங்கம் நிறைவு செய்யும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
 

28.08.2010

 

2/3  பெரும்பான்மைக்கு 5 எம்பிகளே தேவை - ஜனாதிபதி
 

தற்போதய எனது அரசாங்கம் 2/3  பெரும்பான்மையைப் பெறுவதற்கு இன்னமும் 5 பாராளுமன்ற உறுப்பினர்ளே தேவையாகவுள்ளது எனவே இந்த அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் தாராளமாக இணைந்து கொள்ளலாம் அதற்கான கதவினை எப்போதும் தாம் திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றயதினம் (27.08.2010) இடம்பெற்ற அரச நிர்வாக சேவை சங்கத்தின் 28வது வருடாந்த மாநாட்டில் உரை நிகழ்த்தும் போது இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடந்தும் கருத்து வெளியிட்ட அவர் நாம் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கத்தினை நிறுவுவதற்கு எண்ணியுள்ளோம் எம்பிகள் அரசில் இணைவதற்கு மூடியிருந்த கதவுகள் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. விரும்புவோர் அரசில் இணைந்து கொள்ள முடியும் என குறிப்பி;ட்டுள்ளார்.

பஸில் ராஜபக்ஷ தலைமையில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாளையதினம் (29.08.2010) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் றூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித்திட்டங்கள், மீள்குடியேற்றம், தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் யாழ் வரவுள்ளார்.

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வரும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபம்மாராவ் எதிர்வரும் 31ம் திகதி செவ்வாய்க்கிழமை வடக்குப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளுக்கு செல்லும் அவர் பிற்பகல் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதாகவும் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் யாழ் நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கு பற்றவுள்ளார். இக்கலந்துரையாடலில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார், ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்; மேஜர் திருமதி.யோ.பற்குணராஜா உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

வெடி விபத்தில் குடும்பப் பெண் காயம்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (27.08.2010) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.


குறித்த பகுதியில் விளையாடிய சிறுவன் இனங்காண முடியா பொருளொன்றினை எடுத்து வந்து வீட்டின் சமையல் அடுப்பில் போட்டுச் சென்றதாகவும் அது வெடித்ததன் காரணமாக சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தயார் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகி;ன்றது. இச்சம்பவத்தில் ரி.ரட்ணாம்பிகை (வயது 40) எனும் பெண் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கத்திக்குத்துக்கு இலக்கான காவலாளி உயிரிழந்தார்.


மருதானமடம் பகுதியில் நேற்று முன்தினம் (26.08.2010) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த அருளகம் மகளிர் நிலையத்தின் காவலாளி லக்ஸ்மனன் (வயது 62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 

27.08.2010


ராமாவில் நலன்புரி நிலைய மக்களுக்கு காமினி ஆனந்த

 சுவாமிகள் உலர் உணவுப் பொருட்களை அன்பளிப்பு செய்தார்.

 

 

வன்னியிலிருந்து இடம்பெயர்த நிலையில் கொடிகாமம் ராமாவில் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களுக்கு கண்டி தல்கந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு காமினி ஆனந்த சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.


கடந்த 23ம் திகதி களனி தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவுடன் யாழ் குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த காமினி ஆனந்த சுவாமிகள் ராமாவில் நலன்புரி நிலையத்திற்கு சென்று அரிசி,சீனி,பருப்பு,மா,சவற்காரம், உள்ளிட்ட சுமார் பத்துலட்சம் பெறுமதியான பொருட்களை நேரடியாக மக்களிடம் கையளித்தார்.


இன்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா மதத்தால், மொழியால் நாம் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் இலங்கையர்கள் எனக்குறிப்பிட்டாhர். நீண்டகாலமாக நிலவி வந்த பயங்கரவாதம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் தமிழ், சிங்கள, முஸ்லீம், பறங்கியர் அனைவரும் இந்த இலங்கை பூமியின் உரிமையாளர்கள் எனத் தெரிவித்துள்ளார். சுவாமி காமினி ஆனந்த தனது சொந்தப் பணத்தில் 10 இலட்சம் ரூபாவினை உங்களுக்காக வழங்கியிருக்கின்றார் அவர் நினைத்திருந்தால் இப்பணத்தினை தனது பிரதேசத்திலோ அல்லது எனது தேர்தல் தொகுதியான களனியிலோ உள்ள மக்களுக்கு வழங்கியிருக்கலாம் ஆனாலும் எமக்கிடையே நல்லுறவினையும், புரிந்துணர்வினையும் ஏற்படுத்துவதற்காகவே நாம் அனைவரும் குழுவாக இங்கு வந்து உங்களைச் சந்தித்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் 52வது படைப்பிரிவின் சேனாதிபதி, 522வது பிரிகேட்டின் சிவில் இணைப்பு அதிகாரி மேஜர் ரஞ்சாகொட, ராமாவில் நலன்புரி நிலையத்தின் தலைவர், கொடிகாமம் பிரதேச சபைச் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இருவேறு கத்திக்குத்துச் சம்பவங்களில் இருவர் படுகாயம்.

மருதானமடம் மற்றும் யாழ் கலட்டிச்சந்திப் பகுதிகளில் நேற்று (26.08.2010) இடம்பெற்ற இருவேறு கத்திக்குத்துச் சம்பவங்களில் காவலாளி ஒருவரும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றயதினம் மாலை கலட்டிச்சந்திப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது மூன்றாம் ஆண்டு கலைப்பீட மாணவனான லக்ஷ்மன் (வயது 25) என்பவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமநை;துள்ளார். இதேபோன்று இரவு 10 மணியளவில் மருதானார் மடம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் குறித்த பிரதேசத்தில் இயங்கிவரும் அருளகம் மகளிர் இல்ல காவலாளியான லக்ஸ்மனன் (வயது 62) என்பவர் படுகாயமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அபிவிருத்தி தொடர்பாக இலங்கை - இந்திய அதிகாரிகள் ஆராய்வு.

இலங்கையில் இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள பல்வேறு அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக இரு தரப்பினரும் ஆராயும் விசேட மாநாடு நேற்றயதினம் (26.08.2010) புதுடில்லியில் நடைபெற்று முடிந்துள்ளது.
இம்மாநாட்டில் இலங்கையின் சார்பில் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவும், இந்திய அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமார், தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்தல், விமானத்தளம் மற்றும் ரெயில்வே, துறைமுக அபிவிருத்தி விவசாய முன்னேற்ற நடவடிக்கை தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

செஞ்சிலுவை அதிகாரி முல்லைத்தீவு செல்ல அனுமதி மறுப்பு.

இலங்கைச் செஞ்;சிலுவைச் சங்க யாழ் மாவட்ட செயலாளர் பாதுகாப்பு செயலகத்தின் அனுமதியின்மையால் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளரான கு.பாலகிருஷ்னன் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்துள்ள மக்களி;ன் நலன் தொடர்பாகவும் அங்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் இணைப்பு அலுவலகம் ஒன்றினை அமைப்பதற்காகவும் முல்லைத்தீவுக்கு சென்றவேளை ஒட்டுசுட்டான் ஒலுமடு இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து பாதுகாப்பு செயலகத்தின் அனுமதி இன்மையால் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய யாழ் அரசாங்க அதிபருக்கு சுன்னாகத்தில் வரவேற்பு விழா.

யாழ் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக பதவியேற்றுள்ள திருமதி இமெல்டா சுகுமாருக்கு இன்று (27.08.2010) பிற்பகல் 3 மணியளவில் சுன்னாகத்தில் வரவேற்பு விழாவொன்று இடம்பெற்றது.
நீதி, அரசியல் அமைப்பு விவகார, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் முன்னாள் ஆலோசகர் இ.பேரின்பநாயகம் தலைமையில் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் இன்நிகழ்வு இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், வலி தெற்குப் பிரதேச செயலர் திருமதி சதீசன் மஞ்சுளாதேவி, வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா 51 ஆயிரம் வீடுகள்

இடம்பெயர்ந்து மீளவும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு 51 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவுள்ளதாக வடமாகாகண ஆளுநர் மேஜர் ஜென்ரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் செலவில் ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இதனை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு செப்டெம்பர் மாதம் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் குழு இலங்கை வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 175 வீடுகள் மன்னார் மாவட்டத்திலும், 250 வீடுகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும், 150 வீடுகள் வவுனியா மாவட்டத்திலும், 125 வீடுகள் யாழ் மாவட்டத்திலும் நிர்மானிக்கப்படவுள்ளது. வீடொன்றிற்கு 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அவ்வீடு இரண்டு அறைகளைக் கொண்டதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலன்புரி முகாம் மக்கள் மழை நீர் வடிகால்களை அமைத்தனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இன்னமும் கொடிகாமம் ராமாவில் நலன்புர்p முகாமில் தங்கியுள்ள மக்கள் தமக்கான மழைநீர் வடிந்தோடும் வாய்க்கால்களை தாமே அமைத்துக் கொண்டுள்ளனர்.
மழை காலம் ஆரம்பமாகவுள்ளதாக தமக்கான மழைநீர் வடிகால்களை அமைத்துத் தருமாறு பலமுறை குறித்த முகாம் மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் அவை மேற்கொள்ளப்படவில்லை எனவும் தாமே நேற்றயதினம் (26.08.2010) சிரமதானப் பணி மூலம் வடிகால்களை அமைத்துக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


 

குமுறும் மலையகம்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்

அறிக்கைகள்

துண்டுப்பிரசுரங்கள்

 

எங்கள் சின்னம்

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

Memories of Upali Cooray

 

 

 

13வது திருத்தம்என்றால்?

உங்களின் புதிருக்கு வரதரின் விடை (பகுதி 2)

உதயம் மாத இதழில்  எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்

கூட்டமைப்பு ( DTNA )

21 மே 2009

இந்திய வெளியுறவு செயலர் பாதுகாப்பு ஆலோசகருடன் டிரிஎன்ஏ சந்திப்பு
 


இனப்பிரச்சினை

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான

அரசியற் தீர்வு தொடர்பாக

எமது கட்சியின் விளக்கம்
 

இணைத் தலைமை


ஜெனீவா பேச்சு


மத நிறுவனங்கள்


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

யாழ் - வவுனியா தேர்தல்

வன்னி மக்களின் அவலங்கள்

கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு தனித்தனிக் கட்சிகளாக இணைந்து செயற்படுவதே பலனளிக்கும். புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்: நேர்கண்டவர் பி. வீரசிங்கம்

 மேலும்

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh